16-04-2009 வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தார்கள்.
2009 இனவாத அரசின் தமிழர் இன அழிப்புப் தொடர்….!


16-04-2009 வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தார்கள்.
மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் அன்று வியாழக்கிழமை காலை 8:50 நிமிடமளவில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.
இதில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தார்கள்.
இத்தாக்குதல்களினால் மக்களின் 7 கூடாரங்கள் முற்றாக அழிந்து நாசமாகின.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையினதும் நட்டாங்கண்டல் மருத்துவமனையினதும் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் காயமடைந்தவர்களுக்கு ‘திலீபன்’ மருத்துவ சேவைப்பிரிவினரும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
மாத்தளன் மருத்துவமனைக்குச் செல்லும் வீதி படையினரின் கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதானால் காயமடைந்தவர்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை முள்ளிவாய்கால் மற்றும் இரட்டாவாய்கால் ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து தீவிரமான ஷெல் தாக்குதல். போக்கனைப் பகுதியும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இத்தாக்குதல்கலில் படுகாயமடைந்த 130 பொதுமக்கள் புதுமாதளன் தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் 107 பேர் குண்டுத் தாக்குதலால் காயமடைந்தார்கள், மேலும் 23 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள். நோயாளிகளில் 7 பேர் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தனர். காயமடைந்தவர்களில் 60 பேர் போக்கனைப் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 13 வயது, 52 வயதான நீரிழிவு பெண் மற்றும் நோயறிதல் இல்லாத 71 வயது ஆண் ஆகியோரும் அன்று மருத்துவமனையில் இறந்தார்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் பெயர், விபரம் கிடைக்கப்பெறவில்லை.
இதே நாள் வன்னியில் வேவ்வேறு இடங்களிலும் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்களின் விபரங்கள் கிடைக்கவில்லை .
தீவிரமாக காயமடைந்த 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போக்குவரத்துக்காக ஐ.சி.ஆர்.சி கப்பலுக்காக காத்திருந்தார்கள். இந்தக் கப்பல் வெள்ளிக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பதிவு – முள்ளிவாய்க்களும் முற்றத்து மண்ணும் நூலில் இருந்து.
படம்- த. வி.பு. ஊடகப் பிரிவு










