வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 2013 வல்வையில் நடைபெற்றன.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 2013 நெற்கொழு பொது விளையாட்டு அரங்கு வல்வெட்டித்துறையில் 11.05.2013 சனிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு தலைவர் திரு.இ.த.ஜெயசீலன் (பிரதேச செயலாளர் பருத்தித்துறை )பிரதம விருந்தினர் திரு.சுந்தரம் அருமைநாயகம் (அரசாங்க அதிபர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்)சிறப்பு விருந்தினர்கள் திரு.எம்.ஆர்.மோகனதாஸ் (மாவட்ட விளையாட்டு அதிகாரி)திரு.கி.இராஜதுரை(அதிபர் யா/சிதம்பரா கல்லூரி) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இவ்விளையாட்டு விழாவில் விழாவில் 100m ஓட்டம் ஆண்,பெண் 800m ஓட்டம் பெண்கள் 1500m ஆண்கள்,அஞ்சலியக மாணவர்கள் வழங்கிய இசையுடன் யோகா அசைவுகள், உதைபந்தாட்ட இறுதியாட்ட நிகழ்வுகள். திக்கம் இளைஞர் வி.கழகம் எதிர் வல்வை விளையாட்டுக்கழகம் மோதி 2:1 என்ற கோல் கணக்கில் வல்வை வி.கழகம் வெற்றிபெற்றது. 2013ம் ஆண்டு பிரதேச செயலக போட்டிகளில் முதலாமிடம் பருத்தித்துறை சென்தொமாஷ் வி.கழகம் 63 புள்ளி, இரண்டாமிடம் நெற்கொழு கழுகுகள் வி.கழகம் 42புள்ளி, மூன்றாமிடம் வல்வை விளையாட்டுக்கழகம் 40புள்ளி. மற்றும் சிறந்த தடகள வீரர் துஷ்யந்தன் கழுகுகள் வி.கழகம் 100m ஓட்டத்தில் 11.1செக்கனில் ஓடிமுடித்தார், சிறந்த தடகள வீராங்கனை தனுசா வல்வை நெடியகாடு வி.கழகம் இவர் நீளம் பாய்தலில் 4.08m, சென்தொமாஷ் வி.கழகம் ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தலில்6.28m பாய்ந்து சாதனை புரிந்துள்ளார்கள். பரிசில்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு இனிது நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published.