வல்வை செய்திகள்

20-04-2009 திங்கட்கிழமை அன்று வன்னியில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் ‘பாதுகாப்பு வலயப்’ பகுதிகள் மீது படையினர் அதிகாலை முதல் அகோர தாக்குதல்களை நாடாத்தினார்கள் அதில் 476 சிறுவர்கள் உட்பட 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் 3,333 தமிழர்கள் படுகாயமடைந்தார்கள்

2009 இனவாத அரசின் தமிழர் இன அழிப்புப் தொடர்….!

20-04-2009 திங்கட்கிழமை அன்று வன்னியில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் ‘பாதுகாப்பு வலயப்’ பகுதிகள் மீது படையினர் அதிகாலை முதல் அகோர தாக்குதல்களை நாடாத்தினார்கள் அதில் 476 சிறுவர்கள் உட்பட 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் 3,333 தமிழர்கள் படுகாயமடைந்தார்கள்

‘பாதுகாப்பு வலய’ பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று 19-04-2009 இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி 20-04-2009அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்ந்த நாள். ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் அன்று திங்கட்கிழமை அதிகாலை 2.00 மணி தொடக்கம் தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர்கள்.

மாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை, கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் பீரங்கி, குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் மூர்க்கத்தனமாக நடத்தினர்கள்.

அதனைத் தொடர்ந்து ‘பாதுகாப்பு வலய’ பகுதிகளில் இருந்து வெளியேறிச் சென்று நேற்றைய 19-04-2009 நாள் தம்மிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி, அதிகாலை அளவில், அம்பலவன்பொக்கணை பகுதி ஊடாக சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டார்கள்.

மக்களை மனிதக் கேடயங்களாக்கி சிங்களப் படையினர் முன்னேறியதால் எதிர்த்தாக்குதல்களை நடத்த முடியாமல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது என , விடுதலைப் புலிகளின் வன்னி கட்டளை மையத் தகவல்கள் தெரிவித்த நாள்

இருந்த போதும் தமது இந்த மனிதக் கேடய முயற்சிக்கு ஒத்துழைக்காத மக்கள் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சிறிலங்கா படையினர், இதன் போது பெருமளவிலான மக்களைக் கொன்று குவித்தார்கள்.

சிங்களப் படையினர் ஏவிய ஒருவகையான புகைக்குண்டுகளால் ஏராளமான பொதுமக்கள் மூச்சுத் திணறி இறந்ததார்கள் ஒரு வகையான குண்டுகள், வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றி எரிந்தது பலர் உடல் கருகி கொல்லப்பட்டார்கள்., மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகின.

சிங்களப் படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த இந்த பகுதிகளில் ஏராளமான கொல்லப்பட்டவர்களில் உடலங்கள் சிதறிக்கிடந்தது.

பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார்கள்..

படுகாயமடைந்தவர்கள் ஏராளமானோர் இப்போது அதிகளவில் இறந்து கொண்டிருந்தார்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இப்போதும் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டது

இதேவேளையில் அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் கூடுதலாக நடத்தியிருந்தனர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது . அன்று மருத்துவமனையில் பலர் இறந்தார்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் பெயர், விபரம் கிடைக்கப்பெறவில்லை.

இதே நாள் வன்னியில் வேவ்வேறு இடங்களிலும் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்களின் விபரங்கள் கிடைக்கவில்லை .

பதிவு – முள்ளிவாய்க்களும் முற்றத்து மண்ணும் நூலில் இருந்து.

படம்- த. வி.பு. ஊடகப் பிரிவு

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *