தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் உத்தேச தீர்வுத் திட்ட யோசனையொன்று தயாரிக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் தலைவர்களினால் இந்த யோசனைத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது. மன்னாரில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன. மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று இந்த உத்தேச யோசனைத் திட்டத்தை உருவாக்கவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சட்டத்தரணி குமாரகுருபரன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.













Leave a Reply