அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயணம் செய்த சிறப்பு விமானம் நாளை ஏலம் விடப்படுகிறது.
ஜெரால்ட் ஃபோர்ட், ஜிம்மி கார்ட்டர், ரொனல்ட் ரீகன், ஜார்ஜ் எஸ்.புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு.புஷ் ஆகியோர் பயணித்த விமானமே இவ்வாறு ஏலத்திற்கு விடப்படவுள்ளது.
இந்த விமானத்துடன் ஓய்வு பெற்ற அமெரிக்க வின்வெளி ஓடத்தின் சில பாகங்களும் ஏலத்திற்கு வருகிறது.
‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்றழைக்கப்படும் இந்த சிறப்புமிகு விமானத்தின் ஏலத்திற்கான ஆரம்ப விலை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிக்ஸ் மேசா விமான நிலையத்தில் இந்த விமானம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.