Search

அணிவகுக்கின்றனர் சிறீலங்காவின் 11 ஆயிரம் சிறப்புப் படையினர்

சுமார் ஒரு இலட்சத்திற்கு ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்யப்பட்டதன் உச்சம் கட்டம் 2009 மே 18ம் திகதி இடம்பெற்றது. அதனை, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக கூறி தம்பட்டம் அடிக்கிறது சிறீலங்கா. அந்த அடிப்படையில் நடைபெறும் வெற்றி விழா அணிவகுப்பில்

11ஆயிரம் சிறிலங்காப் படையினர் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் வரும் 18ம் நாள் காலி முகத்திடலில் நடக்கவுள்ள விழாவில் சிறிலங்காவின படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இதில், 6,350 சிறிலங்கா இராணுவத்தினர், 1,300 சிறிலங்கா கடற்படையினர், 1,300 சிறிலங்கா விமானப்படையினர், 1400 சிறிலங்கா காவல்துறையினர்,676 சிவில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 11 ஆயிரம் சிறிலங்காப் படையினர் பங்கேற்கவுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தின் போரக்கல் அணிவகுப்பில், ஆட்டிலறிகள், பல்குழல் ரொக்கட் செலுத்திகள், பொறியியல் வாகனங்கள், டாங்கிகள் உள்ளிட்ட 100 கவசவாகனங்கள் இடம்பெறவுள்ளன.
சிறிலங்கா கடற்படையின் சார்பில், பீரங்கிப் படகுகள், அதிவேக தாக்குதல் படகுகள், சிறிய ஆரோ வகைப் படகுகள் உள்ளிட்ட 50 போர்க்கலங்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.
மேலும் சிறிலங்காவின் விமானப்படையில் உள்ள போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட 30 வான்கலங்களும் இதில் பங்கேற்கவுள்ளன.
இந்த அணிவகுப்புக்கான ஒத்திகைகள் தற்போது காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகிறது.
2009ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா அரசாங்கம் இந்த இன அழிப்பு நாளை போர் வெற்றிவிழாவாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *