யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் வவுனியாவில் நிகழ்வுகள் ஏற்பாடு

யுத்தத்தில் உயிரழிந்தோரை நினைவு கூறும் வகையில் வவுனியாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த நூற்றுக் கணக்கான தமிழ் மக்களை நினைவு கூர்ந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய அரசியல் தலைர்கள், யுத்தத்தில் சொந்தங்களை இழந்தவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களும் புள்ளி விபரங்களை வெளியிட்டிருந்தன.

எனினும் இந்த புள்ளி விபரத் தரவுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *