சில தினங்களுக்கு முன்பாக புதிய வகையான பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஞ்ஞானிகளால் உற்பத்தியாக்கப்பட்டது.
கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் அந்த பறக்கும் காரை பரீட்சாத்தினமாக பறக்க விடப்பட்டபோது ஒரு பாடசாலை வளைவில் நின்ற மரத்தில் மீது மோதியுள்ளது. இதில் இரு நபர்கள் படு காயமடைந்துள்ளனர்.
இது குறித்து இந்தக் கார் விபத்தைப் பார்வையிட்ட நபர்கள் கூறுகையில், விமான ஓட்டியையும், அவருடன் பயணம் செய்தவரையும் மரத்திற்கிடையில் இருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், வேறு எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லையெனவும் கூறியுள்ளனர்.