வல்வை நலன்பரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொது கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்; 2021
வல்வை நலன்பரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொது கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்; 2021

வணக்கம்,
பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு, ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் ஆண்டுப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் இவ் வருடம் COVID 19 தொற்று காரணமாக பொதுக் கூட்டத்தினை ஜனவரி மாதத்தில் நடத்த முடியாத சூழ்நிலை யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் வரும் June மாதம் 21ம் திகதி பூரண தளர்வு நிலை அறிவிக்கப்பட்டால், ஆண்டுப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் வரும் 27.06.2021 ( ஞாயிறு ) அன்று மாலை 5.00 மணிக்கு நடாத்துவதாக தீர்மானித்துள்ளோம். இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
பிரித்தானியா வாழ் வல்வை மக்களை தவறாது கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு : June மாதம் 21ம் திகதி வரவிருக்கும் பூரண தளர்வுநிலை பிற்போடப்பட்டால் பொதுக்கூட்டமும் பிற்போடப்படும்.
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)









