31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் அமரர் தங்கவடிவேல் அழகுதுரை

வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
தங்கவடிவேல் அழகுதுரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
துயர் செய்தி கேட்டு ஓடோடி வந்து எமது துயரைப் பகிர்ந்து கொண்டவர்கள், அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியோர் மற்றும் உதவிகள் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி, சமூக வலைத்தளங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு எமது துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்
குடும்பத்தினர்










