Search

G7 உச்சி மாநாடு பிரிட்டனில் ஆரம்பமாகியது.

ஜி7 மாநாட்டில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அதில் ஒன்று

உலக சுகாதார நிறுவனம் (Who)
கொரோனா உருவான விதம் பற்றி மீளவும் ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டில் G7 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள் . ஜி7 உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில், தலைமை வகிக்கும்.

ஜுன் மாதம் 11 நடைபெறுகின்ற  உச்சி மாநாடு, ஜோ பைடன் (Joe Biden) அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் G7 உச்சிமாநாடாக  இருக்கு.

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்து உச்சி மாநாட்டை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உச்சிமாநாடு ஜூன் 11-13 அன்று இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியான கார்ன்வாலில் உள்ள கடலோர நகரமான கார்பிஸ் விரிகுடாவில் நடைபெறுகிறது.

கோவிட் -19 (Covid-!9) மற்றும் காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நடவடிக்கை ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளின் தலைவர்களும் அமைச்சர்களும் சமீபத்திய மாதங்களில் சந்தித்துள்ளனர்.

தொற்றுநோயிலிருந்து உலகம் மீள்வதற்கு உச்சிமாநாடு ஒரு ஊக்க சக்தியாக இருக்கும் என பிரிட்டன் பிரதமர் அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வது ஜி7 உச்சி மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.  

ஜி7 என்றால் என்ன?

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.

இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன.

இதில் என்ன நடக்கும்?

முதன் முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.

அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.

ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.

ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவ நிலை மாற்றம், எய்ட்ஸ் மற்றும் உலகபாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விஷயங்களாகும்.

மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டதோ, அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும்

ஜி7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள்.

பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

இதனால் என்ன நன்மை உண்டா?

2018,2017,2016 எய்ட்ஸ், டிபி, மலேரியாவுக்கும் 2021 covid19, காலனிலை எதிராக போராட சர்வதேச நிதி திரட்ட இந்த ஜி7 குழு உதவி இருக்கிறது. இதனால் 2002ஆம் ஆண்டில் இருந்து 27 மில்லியன் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016 பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்த இந்த மாநாடு உந்துகோலாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த உறுப்பு நாடுகளில் சீனா ஏன் இடம்பெறவில்லை?

உலகின் அதிக மக்கள் தொகை மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. எனினும் தனிநபர் சொத்து என்பது குறைவாக இருக்கிறது. ஜி7 உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் அளவிற்கு சீனா இல்லை என்பதால் அந்நாடு இக்குழுவில் இடம் பெறவில்லை.

ஜி7 நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஜி7 நாடுகளுக்குள் அதிகளவில் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. இறக்குமதிக்கான வரி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கடந்த காலங்களில் கனடாவில் நடைபெற்றது.

ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் எந்த நாடுகளும் இந்த ஜி7-ல் இடம் பெறவில்லை.

மேலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி20-ல் இடம் பெற்றிருந்தாலும் ஜி7-ன் உறுப்பினர்களாக இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *