நினைவலைகள் அமரர் சோமசுந்தரம் சிவஞானசுந்தரம் (லெட்சி அண்ணா)


சோமசுந்தரம் சிவஞானசுந்தரம் (லெட்சி அண்ணா)
அவர்களுக்கு;;;;;;
வல்வையம்பதியில் பயில்வான் சோமு என்று பலராலும் பேசப்படும் சோமசுந்தரம் பெற்ற சிவஞானசுந்தரம் அண்ணலே! சிறுவயது முதல் சிவபெருமானிடம் சிவதொண்டுகள் செய்து சிவதொண்டனாக இருந்து சிவதொண்டர்களை சீராக வழிநடத்திய சிந்தையாளனே! நிமிர்ந்த நடையுடைய நிர்மலனே!வீரரமணி மனையாளை கரம்பிடித்து ஞாலம் போற்றும் நான்கு நாயகர்களை ( அரங்கண்ணல், ஜனார்த்தனன், அனபாயன், லம்போதரன்) பெற்றெடுத்து பெருமை பேச வைத்த பேராசானே! வல்வை வைத்தீஸ்வரன் சந்நிதியில் மக்களால் பாடப்படும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கணீர் என்ற ஒலியால் களைக்காது சலிக்காது பாடும் சக்தி உள்ள பக்தனே!
என்னை சோமு என்று அழைத்து பெருமான் பள்ளியறைக்கு எழுந்தருளும் போது “பஞ்சபுராணம்” பாடு என்று என்னை சிவன் சன்னிதானத்தில் முதன்முதலாக பாடவைத்த பாவலனே!சிவபெருமானின் புகழ்பாடும் பாடல் “தொம் தொம் தோமென ஆடியபாதம்” “ஆடுகிறான் எம்மை ஆட்டுகின்றான்” ஆகிய சிவபெருமானின் இரு பாடல்களையும் தானே தனது கையால் எழுதி என்னிடம் தந்து நீ மனனம் செய்து பாடு என என்னை பாடவைத்த பெருமை உங்களையே சாரும் அண்ணலே!
கடந்த இரு வருடங்கள் (2020,2021) வைத்தீஸ்வர பெருமானினதும் வாலம்பிகா தேவியினதும் மகோற்சவங்கள் நடைபெறாததால் மனம் நொந்தோ பெருமானினதும் பெருமாட்டியினதும் பாதங்களை அடைவதற்காகவோ பெருமாட்டியின் ஆடிப்பூர நாளில் ஆனந்தமாக சென்றீர்கள் அண்ணலே!
உங்கள் துயரில் நாங்களும்
மதவடி சி.சோமு குடும்பம்










