வல்வை செய்திகள்

இலங்கை தமிழ் ஏதலியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை 03.08.2021 ஆரம்பித்து தொடர்ந்த வேளை ஒருவர் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார், இரண்டு பேர் தூக்கு மாட்டி கொண்டார்கள், 16 பேர் தூக்க மாத்திரை உட் கொண்டார்கள்.இதில் இரண்டு பேர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் 16 சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இலங்கை தமிழ் ஏதலியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை 03.08.2021 ஆரம்பித்து தொடர்ந்த வேளை ஒருவர் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார், இரண்டு பேர் தூக்கு மாட்டி கொண்டார்கள், 16 பேர் தூக்க மாத்திரை உட் கொண்டார்கள்.இதில் இரண்டு பேர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் 16 சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

தமிழக வாழ் ஏதலியர்கள் குடியுரிமை 136000-140000 வழங்கப்படாத நிலையில்
திறந்தவெளி சிறைச்சாலையிலும்,தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ளும் நிலையில்
திறந்தவெளி சிறைச்சாலை சிறப்பு முகாம்களிலும் ஒருவர் மரணம் உட்பட 74 பேரும். 108 முகாம்களில் மிக மிக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு தங்கி வாழ்ந்து வருகின்றார்கள்.

அகிம்சை வழியான உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்க தமிழக காவல்துறையினர் கிபிராச்சின் செயற்பாடுகளினால் அதாவது திரும்பத் திரும்ப வழக்குகளை பதிவு செய்து மூன்று வருடம் இரண்டு வருடம் நான்கு வருடம் என மேலும் தண்டனைகளை நீண்ட காலம் செய்வதனூடாகவும் வழக்குகள் முடிவடைந்து வருகின்ற பட்சத்தில் தமிழக காவல்துறையினர் உண்ணாவிரதம் இருந்ததற்கும் வழக்குகளை பதிவு செய்து வருகின்றர்ர இதனாலும் பாதிப்படைந்த ஏதலியர்கள் 03 கிழமை ஆகஸ்ட் மாத இலங்கை தமிழ் ஏதலியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட மையினால் மனித உரிமை இழந்த ஏதலியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியடைந்து தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ள எண்ணி ஒருவர் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார், இரண்டு பேர் தூக்கு மாட்டி கொண்டார்கள், 16 பேர் தூக்க மாத்திரை உட் கொண்டார்கள்.இதில் இரண்டு பேர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் கொடூரமான நிலையை கண்டு 03 உலக அமைப்புகள் இந்திய பிரதமருக்கு கடிதத்தை எழுதி அனுப்பி உள்ளார்கள்.
ஏனைய அமைப்புக்களும் தங்களது நிலை கண்டு இந்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் ஏதலியர்கள் வேண்டி நிற்கின்றார்கள்.

மற்றும் ஆளுங்கட்சியினர் எதிர்கட்சியினர் விடயங்களை ஆராய்ந்து வருகின்றனர்.எதலியர்கள் சார்பில் தெரிவிக்கையில் தங்களின் படுமோசமான நிலைமைகளை ஆராயப்படுவதோடு நின்றுவிடாமல் தங்களுக்கான நீதியை பெற்றுத் தருமாறும் பய அச்சுறுத்தலுக்கு மத்தியில் இதுவரை காலமும் இல்லாமல் தங்களது உரிமைகளை தாங்களே பேச முன் வந்து.தங்களுக்கான உரிமைகளை மூன்று விடயங்களாக கேட்டுள்ளார்கள்.

01. இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்
02.தாங்கள் விரும்பியபடி மூன்றாவது எந்தவொரு நாட்டிற்கு குடியுரிமை கேட்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.
03.தாயக பூமியான வடகிழக்குக்கு உரிய விசாக்களை பெற்று தந்து செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும்.

இந்த மூன்றாவது விடயம் சம்பந்தமாக தெரிவிக்கையில் விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்த ஒருவர் வீதம் ஒரு ஆண்டுக்கு குற்ற நிதியாக 3500 ரூபா படி 20 ஆண்டு காலப்பகுதிக்கு 70000 ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால் 350000 ரூபா வழங்க வேண்டும். எதலியர்களுக்கு இவ்வளவு பெருந்தொகையான பணம் கனவிலும் நினைக்க முடியாது.இதனை கருத்திற்கொண்டு இந்திய அரசு முழுமையான பொறுப்புக்களையும் தானே ஏற்றுக்கொண்டு முன்வந்து அத்தனை செலவுகளையும் தாமே வழங்கி விடுதலை செய்வார்களாயின் இந்த மக்களுக்கு வழங்குகின்ற சிறப்பு உருமையாகவும் கருதப்படும்.இல்லாவிட்டால் இந்தியா குடியுரிமை வழங்கி ஒரு சாமானிய இந்தியர் பெற்றுக்கொள்கின்ற சுதந்திரத்தை பெற்றுக்கொள்வார்கள் ஆயின் அதுவும் சிறப்புரிமை ஆகும்.

இந்தியாவின் தமிழக ஏதலியர்கள் விடுதலை பெறுவதற்கான கால ஆண்டுகள் அதிகமாக இருப்பதனால் 108 முகாம்களில் இருக்கின்றவர்கள் அவர்களுக்கான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு புலம்பெயர் அமைப்புக்களின் பங்களிப்பையும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்

மற்றும் அவர்கள் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நான்கு கொள்கைகளை வைத்துள்ளார்கள் அவை.
01.கல்வித்திட்டம் இப்பொழுது உயர் சட்டக் கல்வியை கற்பதற்கு மாத்திரம் அனுமதிக்கப்படுகிறது ஏனைய துறைகளிலும் இவர்கள் உயர் கல்வி கற்பதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
02.சட்டம் வழக்குகளை முன்னெடுப்பதற்கும் துரிதப்படுத்துவதற்கு தொடர்ந்தும் செயல்படுத்துவதற்கும் வழக்கறிஞர் குழுவை நியமித்தல்.இங்குதான் பெருமளவான நிதி தேவைப்படுகின்றது தொடர்ந்து வழக்குகளை மேற்கொள்வதால் வழக்கறிஞர்கள் உடைய வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களுக்கு தொடர்ந்து நிதியை வழங்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
03.பொருளாதாரம் (இந்தியத் திருநாட்டில் எங்கு சென்றும் வேலை பார்ப்பதற்கான அனுமதி)
04.தரவுகளை திரட்டல் (ஒவ்வொருவருடைய முழுமையான அவர்களையும் கோவை படுத்துதல் )

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *