இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு 13 ஆம் திகதிவரை நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் இன்று 03.09.2021 நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்த்ளளார்.










