பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் நிகழ்வு ஒன்றில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப் போர் தொடர்பான நினைவு நிகழ்வுகள் பிரித்தானியாவின் கிலாஸ்கோவில் நடைபெறவுள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொள்ளப்பட வேண்டும் எனவும், இதனால் குறித்த நிகழ்வில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அமைப்புக்களும் சில எதிர்க்கட்சிகளும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. எனினும், இந்தக் கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்த நிகழ்வில் பெரும்பாலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பிலான உலக நிகழ்வு ஒன்றில் இலங்கையை அழைப்பது எவ்வாறு சரியானது என ஸ்கொட்லாந்துக்கான சர்வதேச மன்னிப்புச் சபைக்கான திட்டப் பணிப்பாளர் மார்க் பெவன் தெரிவித்துள்ளார்.













Leave a Reply