இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் இன்றாகும் 17.09.2021

இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், மதிப்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அவரது தனித்தன்மை வாய்ந்த பார்வை, தனித்துவ தலைமை பண்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆகியவை நாட்டின் அனைத்து நிலையிலான வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளது. அவர் நீண்டகாலம் சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
இந்திய பிரதமர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்பாணம் சென்ற இந்திய பிரதமர் என்ற வரலாற்றையும் உறுவாக்கியவர்.
இந்தியவில் பயன்படுத்தப்படும் 108 அம்பிலன்ஸை இலங்கையில் அமுல்படுத்த உறுதியளித்து 147.81 கோடி நிதியுதவியில் 297 வழங்கியுள்ளார். இது தற்போது வடகிழக்கிலும் இக்கட்டான கொரோனா காலத்தில் பயன்பாட்டிலுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமையிலான ஆட்சிக்கு வந்ததும் 55000 மலையக தமிழ் மக்களுக்கு கட்டி வழங்கப்படும் என உறுதி அளித்து 2019ஆம் ஆண்டு 400 வீட்டுத் திட்டங்கள் நுவரெலியாவில் கட்டப்பட்டது.
பின்னர் யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரம் வீடுகள் கட்டி கையளிக்கப்பட்டது
காங்கேசன்துறை முகத்தை மத்திய அரசு 2018ஆம் ஆண்டு 288 கோடி ரூபாய் கட்டுவித்து தமிழ் மக்களுக்கு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.
யாழ் தேவி ரயில் சேவையை மேம்படுத்த இந்திய அரசு 2130 கோடி அனுமதி அளித்து உதவி செய்து திறந்துவைக்கப்பட்டது.
யாழ் சர்வதேச விமான நிலையம் பலாலியில் அமைப்பதற்கு இலங்கையின் நிதியுடன் 300 கோடி ரூபா நிதியினை வழங்கி அபிவிருத்தி செய்யப்பட்டது.
இலங்கைத் தமிழர்கள் மீது கைவைத்தால் இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 13வது திருத்த சட்டத்தில் கை வைக்கக் கூடாது என்றும் அமல்படுத்தி மாகாணசபைத் தேர்தலை வைக்கும்படியும் வலியுறுத்தியிருந்தார்.
அதாவது இலங்கையில் தமிழர்கள் நீதி அமைதி சமத்துவத்துடன் வாழ்வதை இந்தியா உறுதி செய்ய உள்ளது. என்ற தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை கழகத்தினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா ஜப்பான் நடுநிலைமை வகித்து.























