வல்வை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கைதை  கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், தமிழ் தேசிய கட்சி (த.தே.க) Tamil National party (T.N.P)எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கைதை  கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்,
தமிழ் தேசிய கட்சி (த.தே.க) Tamil National party (T.N.P)எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபன் அவர்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் நினைவேந்தச் சென்ற போது பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்படத்தை

கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்,
தமிழ் தேசிய கட்சி (த.தே.க) Tamil National party (T.N.P)எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனையும் அவருடன் மேலும் இருவரையும் கைது செய்துத மாத்திரமல்லாது பல பெண் உறுப்பினர்களையும் தாக்கி கீழ்த்தரமாக காட்டுமிராண்டித்தனமாக எஸ் ஆர் நடந்துகொண்ட காணொளி காட்சிகளை மக்கள் பார்த்திருப்பார்கள் ஒரு இலங்கையின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலைமை என்றால் வேறு யாருக்கும் என்ன நடக்கும் என்ற சூழ்நிலையியே கார்த்தி நிற்கின்றார்கள்.

ஆகவே இந்தச் சம்பவம் என்பது உலகத்திலே  அங்கீகரிக்கப்பட்ட இறந்தவர்களுக்கான நினைவேந்தும் உரிமை மறுப்பது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கை இலங்கையினுடைய ஆட்சித் தலைவர் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் உடைய தலைமைச் செயலகத்திலே உரையாற்றி விட்டு அங்கேயே தங்கி நிற்கின்ற நேரத்தில் கூடி இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடவடிக்கையை பொலிஸார் எடுத்து இருக்கின்றார்கள் நீதிமன்ற நடவடிக்கை இன்று ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்கள் நேற்றைய தினமே ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆகவே இந்த நடவடிக்கை மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளையும் விடுதலைப் போராட்ட உணர்வுகளையோ  மழுங்கடிக்க முடியாது என்பதை எதிர்காலத்திலே நாங்கள் அனைவரும் கட்சி பேதங்களை கடந்து இந்த நினைவேந்தல்களை இறுக்கமாகவும் பாரியளவில் செய்வதுதான் இவர்களுக்கான பதிலடியாக இருக்கும் என்பதுதான் தன்னுடைய கருத்தாக தெரிவித்திருந்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *