அன்னபூரணிஅம்மாள் அமெரிக்க சென்ற பவளவிழா (1938 – 2013)
இவ்வருடம் வல்வையர்களின் விழாக்களெல்லாம் அன்னபூரணியின் பவளவிழாவாக கொண்டாப்பட்டு வருகின்றது. இவ் வரிசையில் இங்கிலாந்து வல்வை நலன்புரிச் சங்கத்தின்
கோடைவிழாவை (07.07.2013),அன்னபூரணியின் பவளவிழாவாக ஆடிமாதம் 07ம் திகதி விமரிசையாக கொண்டாட இருக்கின்றது.
இவ் வருடம் கோடைவிழாவின் பிரதான தளமாக அன்னபூரணியின் மாதிரி உருவம் வடிவமைப்புச் செய்ய இருக்கின்றோம். இங்கிலாந்தில் நடைபெற்ற 2012 ஒலிம்பிக் நிகழ்வுகள் போல் அன்னபூரணிக்கு முன்பாக ஆடல்பாடல் நிகழ்வுகள் செய்வதற்கு கலைக்குழுவால் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. புலம்பெயர் தேசங்களிலிருந்து வல்வைக் கலைஞர்கள் வந்து விழாவை சிறப்பிக்கும் வண்ணம் வேண்டப்படுகின்றீர்கள். அன்னபூரணியின் மாதிரி உருவம் வல்வை தொழில்நூட்ப்பக் கலைஞர்களால் உருவாக்கப்படவுள்ளது. தயது செய்து அன்னபூரணின் மாடல் உருவம் செய்வதற்கு ஆர்வம் உள்ளவர்கள் எமது கலைக்குழுவினருடன் தொடர்பு கொள்ளவும்.
இவ்வருடம் வல்வை முத்துமாரியின் திருவிழாக்கள் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது போல் அன்னபூரணின் பவளவிழாவும் எமது இணையத்தளத்தால் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகின்றேம்.
தொடர்புகளுக்கு: கலாச்சாரக்குழு பொறுப்பாளர்;- ரிசி- 07890 085 111
அன்னபூரணி வடிவமைப்பு பொறுப்பாளர்- வல்வை மாமாச்சி – 07707 464 887