மே மாதம் சோகத்தை மட்டும் சுமப்பதற்கல்ல. கூட்டிணைந்த செயற்பாடுகள் ஊடாக தேசத்தின் கனவினை நனவாக்குவதற்கு. வலிசுமந்தோருக்கு வணக்கம் செலுத்தி, தியாகங்களுக்கு மரியாதை அளித்து தொடர்வோம் போராட்டத்தை.
முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல. இன்னொரு போராட்டத்திற்கான ஆரம்பம். நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.