மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா ( ரவி அண்ணா )
பிறப்பு 29/08/1957 இறப்பு 10/10/2021
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட
திரு பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா ( ரவி அண்ணா ) அவர்கள் 10/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி கலந்தார்.
அன்னார் அமரர் திரு கந்தசாமி பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் புஷ்பவதி அவர்களின் அன்பு மகனும்,
அமரர் திரு வேலுச்சாமி பரமசிவம், பரமசிவம் சற்குணசவுந்தரி அவர்களின் அன்பு மருமகனும்,
திருமதி ரவிந்திரராசா வசந்தியின் அன்புக் கணவரும், செல்வன் யோகேந்திரா, ,செல்வி அகல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
திரு.பா.மகேந்திரராசா ( மோகன் ),
திரு.பா.யோகேந்திரராசா ( பழனி ),
திருமதி. திருஞானசம்பந்தமூர்த்தி பத்மாதேவி,
திருமதி. ஜெயதாஸ் வனிதாதேவி,
திருமதி. ஜெயமனோகர் ராதாதேவி,
திருமதி. ரூபசிங்கம் விஜியாதேவி,
திருமதி. சிவகுமார் சர்மிளாதேவி,
திருமதி. ஜெயகுமார் கோகிலாதேவி அகியோரின் அன்பு சகோதரரும்,
காலம் சென்ற திரு ப.வதனராஜன்(வதனி),
ப.வில்வராஜன்(வில்லி),
மற்றும் ப.சுரேந்திரன் ( வண்ணம் ),
ப.கமலநாதன் ( கண்ணன் ),
ப.கார்த்திகேசன் ( கார்த்திக் ),
திருமதி. பிரேமச்சந்திரன் வதனராணி,
திருமதி. மகேந்திரராஜா ரூபவதனா,
திருமதி. ஜெயபாலசிங்கம் நாகராணி ( கீதா ),
காலம்சென்ற செல்வி பரமசிவம் தமயந்தி அவர்களின் மைத்துனருமாவர்.
அன்னாரின் துயரச்செய்தியினை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன், இறுதிகிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும் என்பதனை குடும்பத்தார் ஆகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜக்கிய இராச்சிய முகவரி:-
42 Coverton Rd ,
Tooting,
London.
SW170QL
தொடர்புகளுக்கு:-
வசந்தி -மனைவி-07773649636. மோகன் அண்ணா – சகோதரர்- 07504683433.







