யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிப்பு!?

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிப்பு!?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். குறிப்பாக சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஏதாவது அஞ்சலிகள் இடம்பெறலாம் என்று தெரிவித்தே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை பெருமளவான படை குவிப்பு காரணமாக பல்கலைக்கழக சூழலில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.