Search

தமிழர் உரிமைகளுக்காக போராடும் எம்மை அடக்க நினைக்கும் சிறிலங்கா பேரினவாத அரசு. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை காட்டம்.

தமிழர் உரிமைகளுக்காக போராடும் எம்மை அடக்க நினைக்கும் சிறிலங்கா பேரினவாத அரசு.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை காட்டம்.

சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் என்னிடம் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக எதிர்வரும் 20 ம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 05 தில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் எங்குள்ளது? இந்த நாட்டில் காலம் காலமாக தொடர்ச்சியாகவே தமிழர்களை அடக்கி,ஒடுக்கி, எமது உரிமைகளை தரமறுக்கின்றது இந்த சிங்கள பேரினவாதம்.

நாட்டில் இன்று ஆயுத ரீதியிலான போராட்டங்கள் எதுவும் இல்லை எனினும் எமது உரிமைகளை நாங்கள் ஜனநாயக வழியில் போராடி கேட்கின்றோம். அவ்வாறு போராடும் எம்மை சிங்கள பேரினவாதம் தனது பாசிசகரத்தினால் அடக்கி ஒடுக்க நினைக்கின்றது அதில் ஒரு உபாயம் தான் பயங்கரவாத தடைச் சட்டத்தில் விசாரிப்பது என்பது

எது எவ்வாறு இருந்தாலும் எமக்கான உரிமைகளை நாம் பெற்றெடுக்கும் வரை நாம் தொடர்ந்து தமிழ்த் தேசியத்தின் பாதையில் அறவழியில் பயணித்துக் கொண்டே இருப்போம்.

இலங்கையில் தமிழர்கள் தமிழ்த் தேசிய அரசியல் செய்யவேண்டும் என்றால் சிங்களவர்களின் கைக்கூலிகளாக இருக்க வேண்டுமா???அல்லது சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற வேண்டுமா??

நாம் சிறை சென்றாலும் தமிழ்த் தேசிய அரசியலையும், நாம் நேசிக்கும் எம் இனத்தையும் சிங்களப் பேரினவாதத்திடம் அடகு வைக்கும் செயற்பாட்டை எந்தவொரு சூழ்நிலையிலும் செய்ய மாட்டோம்

ஜன நாயகத்தின் குரல் வலை நசிக்கப்படுகின்ற போதேல்லாம் நாம் அறவழியில் போராடி எமக்கான ஜனநாயக அரசியலை வென்றெடுப்போம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *