Agni-V: அக்னி-5 ஏவுகணை- இந்தியாவின் சோதனை வெற்றி.தொழில்நுட்ப விருத்தியும்

அக்னி 5 (Agni-V) ஏவுகணை ஒலியை விட வேகமாக செல்லும் ஆற்றல் படைத்தது. நொடிக்கு 8.16 கிலோமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்துக்கு 29,401 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது.
ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அக்னி-5 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்தியா நேற்று சோதித்து பார்த்தது. கடந்த அண்டே இந்த சோதனையை நடத்துவதாக இருந்தது எனினும் கொரோனா காரணமாக ஏவுகணை சோதனை தள்ளிப்போனது. 5 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மூன்று பிரிவு திடமான எரிசக்தியுடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை இலக்கை மிக துல்லியமாக தாக்குதல் திறன் கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM ) அக்னி-5 ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட். இணைந்து உருவாக்கியுள்ளன. சுமார் 50 ஆயிரம் கிலோ எடைகொண்ட இந்த ஏவுகணை 1.7 மீட்டர் உயரத்தையும் 2 மீட்டர் விட்டத்தையும் கொண்டுள்ளது.
























இந்தியாவினுடைய டி ஆர் டி ஒ வின் அடுத்த தயாரிப்பு


சீனா வைத்துள்ள டி எஃப் 41




DRDO ஆய்வு நிலையம்












