கீரிமலை சிவபூமி முதியோர் ஆசிரமம் மதிப்புக்குரிய கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
கீரிமலை சிவபூமி முதியோர் ஆசிரமம் மதிப்புக்குரிய கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயச் சூழலில் சிவபூமி அறக்கட்டளையினரால் பாரம்பரியக் கட்டட முறைப்படி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கீரிமலை சிவபூமி ஆச்சிரமத்தின் திறப்பு விழா திருக்கார்த்திகை தீபத் திருநாள் நன்னாளான இன்று வியாழக்கிழமை(18.11.2021) காலை சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும்,பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
ஆச்சிரம வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூல்நிலையத்தை யாழ்.இந்தியத் துணைத் தூதரக சிரேஷ்ட அதிகாரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.












































