அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழும் நன்றி நவிலலும் அமரர் பாக்கியலட்சுமி சிவயோககுரு

கடந்த 27.10.2021 அன்று சிவப்பேறு எய்திய எமது குலவிளக்கு அமரர் பாக்கியலட்சுமி சிவயோககுரு அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 25.11.2021 (வியாழக்கிழமை) அன்று அதிகாலையில் 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தொண்டமானாறு கடற்கரையில் கரைக்கப்படும். 26.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று மு.ப 11.30 மணியளவில் சபிண்டீகரண கிரியையும் ,ஆத்மசாந்தி பிரார்த்தனையும் நடைபெறவுள்ளதால் அதில் கலந்து பிரார்த்தித்து தொடர்ந்து நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
அத்துடன் எங்கள் அன்புக்குரிய தாயாரின் இழப்பின் போது ஆறாத்துயரில் இருந்த எமக்கு நேரிலும் சகல வழிகளிலும் ஆறுதல் கூறியும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்துள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.
காட்டுப்புலம்,
தொண்டமானாறு.









