நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய எம்.கே.சிவாஜிலிங்கம்.

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ,கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரசிய சம்பவம் இன்று ( 26/11/2021) மாலை இடம்பெற்றுள்ளது.
மாவீரர் நாள் அனுஷ்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தினால் பலருக்கு தடைவிதிக்கப்படடிருந்த பட்டியலில் சிவாஜிலிங்கமும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
இத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நகர்த்தல் பத்திரம் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த சிவாஜிலிங்கம் வழக்கின் பின்னர் நீதிமன்ற வாயிலில் நின்றவர்களிற்கு கேக் வழங்கினார்.
இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும் அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும் தெரிவித்து கேக்கினை அங்கு நின்றவர்களிற்கு பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..









