சிரியாவில் தேர்தல் நடக்கும் வரை பதவி விலக மாட்டேன் என சிரியா ஜனாதிபதி ஆசாத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எகிப்து, துனிசியா, ஏமன், லிபியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை போன்று, சிரியாவிலும் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இவர்களை ஒடுக்க சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதில், இதுவரையிலும் 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்னர்.
இந்நிலையில் அடுத்த மாதம் சர்வதேச மாநாட்டைக் கூட்டி விவாதிக்க எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த மாநாடு ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து ஆசாத் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சியினர் நடத்தும் மாநாடு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது. எனவே சிரியாவில் தேர்தல் நடக்கும்