Search

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் இந்தப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட பிரேரணையாக இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மாகாணசபை முறைமைக்கு எதிராகவும் அமைச்சர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

மாநில அரசாங்கங்கள் தவறிழைத்தால் அதிகாரத்தைப் மீளப் பெற்றுக் கொள்ள இந்திய மத்திய அரசாங்கத்திற்கு சாத்தியம் காணப்பட்ட போதிலும், இலங்கை மாகாண சபை முறைமையில் அவ்வாறான ஒழுங்குகள் கிடையாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கி நேரிடும் என தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் நாடு பிளவடையக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *