Search

பருத்தித்துறை பிரதேச செயலக உதைபந்து இரண்டாமிடத்தினை பெற்றது வல்வை அணி

பருத்தித்துறை பிரதேச செயலக உதைபந்து இரண்டாமிடத்தினை பெற்றது வல்வை அணி

பருத்தித்துறை பிரதேச செயலக கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட இறுதியாட்டமானது இன்றைய தினம் ( 20/05/2022) தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது..

அந்தவகையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் வல்வை அணியினை எதிர்த்து கொற்றாவத்தை சிவானந்தா அணியானது மோதியது.

பரபரப்பாக இடம்பெற்ற போட்டியானது ஆட்டநேர முடிவில் எவ்வித கோல்களையும் பெறாமல் சமனிலையில் முடிவடைந்தது.

வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடுவரால் வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகமானது 4:2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை பெற்றுக்கொண்டது. வல்வை அணியானது இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.