பிரித்தானிய உயிரியல் பூங்காவில் பெண் ஊழியர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
வடக்கு பிரித்தானியாவிலுள்ள டால்டன்-இன்-பர்னஸி உயிரியில் பூங்காவின் பெண் ஊழியர் சாரா மெக்கல்லே புலிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பணியில் இருந்தார்.
இதன்போது அங்கிருந்த புலி ஒன்று அவரை திடீரென தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த சாரா உடனே விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது.



















Leave a Reply