சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஜனாதிபதி ஆசாத்தின் படைக்கும், போராளிகள் படைக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இதனையடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்து இருந்தது. இந்நிலையில் புருசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியனின் அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அதில் மேலும் போராளிகளுக்கு எதிரான ஆயுதத்தடையை புதுப்பிக்கப் போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தும் உடனடியாக அவர்களுக்கு ஆயுதங்களை அனுப்பப் போவதில்லை என்றும் மற்ற தடைகள் தொடரும் எனவும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது 2 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் சண்டைக்கு விரைவில் அரசியல் தீர்வை காண உதவும் என்று பிரிட்டனும், பிரான்சும் நம்புகிறது.