Search

தொண்டமானாறு கலைவாணி மென்பந்தாட்ட வல்வை அணி சம்பியனாகியது.

தொண்டமானாறு கலைவாணி மென்பந்தாட்ட வல்வை அணி சம்பியனாகியது.

தொண்டமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகமானது அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையே 11 பேர் 10 பந்துமரிமாற்றம் கொண்ட மென்பந்தாட்ட தொடரொன்றினை இன்றைய தினம் ( 07/08/2022) நடாத்தியது….

அந்த வகையில் வல்வை அணியானது லீக் சுற்றில் நெற்கொழு கழுகுகள் மற்றும் நெடியகாடு விளையாட்டுக்கழகங்களினை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
இறுதியாட்டத்தை பொறுத்தவரையில் தொண்டடனாறு ஒற்றுமை விளையாட்டக்கழகத்துடன் முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை அணியானது 96 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 97 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கமகமானது 72 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் 24 ஓட்டங்களால் தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினை வீழ்த்தி வல்வை அணியானது சம்பியனாகியது..


2022 ஆம் ஆண்டை  பொறுத்தவரையில் வல்வை அணியானது பெற்றுக்கொள்ளும் 2 ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது