Search

அமெரிக்கா ஜனாதிபதிக்கு மீண்டும் விஷம் தடவிய கடிதம்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு

அமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்கு ஏற்கனவே கடந்த மாதம் ஒரு விஷம் தடவிய மர்ம கடிதம் வந்துள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் மற்றொரு விஷம் தடவிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக்கடிதத்தால் சந்தேகம் அடைந்த உளவுத்துறையினர் அதை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனையில் அக்கடிதத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட நூலில் ரிசின் என்ற கடுமையான விஷம் தடவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற கடிதம் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள ஸ்போகன் நகரத்தில் உள்ள நீதிபதி ஒருவருக்கும், பேர்சைல்டு விமானப்படைத் தளத்திலுள்ள ஒரு தபால் அலுவலகம் ஆகியவற்றுக்கும் வந்துள்ளது.

சிவப்பு மையால் முகவரி எழுதப்பட்டுள்ள இந்த கடிதங்களுக்கு, வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஸ்போகன் தபால் நிலையம் கடந்த மே 13ம் திகதி தபால் முத்திரை குத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்போகன் நகரத்தைச் சேர்ந்த ரியான் புகேட்(37) என்பவரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *