பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில் உள்ள செயின்ட் மேரிஸ் மருத்துவமனையில் லேகா ஜேம்ஸ் என்ற 34 வயது இந்தியப் பெண் ஒருவர் இதய நோய்ப் பிரிவில் செவிலியாகப் பணிபுரிந்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக அதே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தனக்கு சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று தனது அனுபவத்தின் மூலம் அங்குள்ள மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இருப்பினும் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அதனைக் காதில் வாங்காமல், அவரைப் பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் சாதாரண வலி நிவாரணிகளைக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
மூன்று நாட்களுக்குப் பின்னர், மயக்க நிலையை அடைந்த செவிலி லேகாவுக்கு குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. இதுகுறித்து நடந்த விசாரணையில், ஊழியர்களின் ஈகோ பிரச்சினையும், போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து செயின்ட் மேரிஸ் மருத்துவமனையின் நிர்வாகம், தங்களுடைய தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
தனக்கு நடந்த துயர சம்பவத்தின் மூலம் அவர்கள் உண்மையை உணர்ந்துகொண்டனர் என்று லேகாவும், அவரது கணவரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.