தியாக தீபம் தீலிபனின் 35ஆண்டு நினைவுதினம் இன்று ஆரம்பம் (15/09/2022)

யாழ் நல்லூரில் முன்றலில் இருந்து இந்திய அரசாங்கத்திடம் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த இராசையா பார்தீபனின் நினைவுதினம் இன்று தமிழர்கள் பரந்து வாழும் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாண பகுதிகளில் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.


நல்லூரில் அமைந்துள்ள இராசையா பார்தீபனின் நினைவாலயத்திலும் இன்று காலை 9.45 மணியளவில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலிகள் ஆரம்பிக்கப்பட்டது.


இவ் நினைவு தினம் 15.9.2022 இருந்து 26.9.2022 வரை அனுஷ்ட்டிக்கப்படும் .
பெருந்திரளான மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.