நாகர்கோவில் பாடசாலை மீது 1995:09:22 அன்று நண்பகல் 12:10 மணியளவில் புக்காரா குண்டு வீசி 22 மாணவர்கள் உட்பட 36 பேரை படுகொலை செய்த 27ம் ஆண்டு நினைவேந்தல்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம் அவர்கள் நினைவேந்தல் செய்தார்.
இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் இனப்படுகொலை செய்யப்பட்ட 22 மாணவர்களின் நாகர்கோவில் படுகொலையின் 27 வது ஆண்டு நினைவு நாள் 22.09.1995-22.09.2022
தமிழ் இனப்படுகொலையாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ( International Criminal Court – ICC ) நிறுத்துவோம் .
கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் ( Enforced Disappered Persons ) விடயத்தில் சர்வதேச நீதி கிடைக்கச் செய்வோம்
மீண்டும் இனப்படுகொலைகள் இடம் பெறாதிருக்கக்கூடிய பாதுகாப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துமாறு கோருவோம் .
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism ACT ) நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் .
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையைப் ( Self – Determination ) பாவித்து , தமிழ்தேசிய இனம் ( Tamil Nation ) தமது சுய நிர்ணய உரிமையைப் பாவிக்கக் கூடியதாக இலங்கையின் வடக்கு – கிழக்கு மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சுதந்திரமா ? சுயாட்சியா ? என்ற பொதுசன வாக்கெடுப்பு (Referendum for Independence or Autonomy ) ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் (International Community ) வேண்டுகோள் விடுகின்றோம் .
நாகர்கோவில் விமானக்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .






















