விமானத் தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராணுவ விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக குறித்த புலி உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2000மாம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வில்பத்து காட்டிலிருந்து அன்டனோவ் 32 ரக விமானத்தை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 30 இராணுவப் படைவீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அனுராதபுர உயர் நீதிமன்றில் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களும் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.