Search

45 ஆம் நாள் நினைவஞ்சலி அமரர் வத்ஸலா நகுவராஜா ( அம்மாகுட்டி)

45 ஆம் நாள் நினைவஞ்சலி கே.கே.எஸ்.வீதி , ஆலடி , வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வத்ஸலா நகுவராஜா ( அம்மாகுட்டி) அவர்களின் 45 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17.10.2022 திங்கட்கிழமை காலை 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் , வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 19.10.2022 புதன்கிழமை பகல் 11.00 மணியளவில் எமது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் , அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .

எம் செல்வத்தின் மரணச்செய்தி அறிந்தவுடன் நேரில் வருகை தந்து எம்மை ஆறுதல்படுத்தி அரவணைத்தோருக்கும் உற்றார் , உறவினர் , நண்பர்கள் மற்றும் தொலைபேசி மூலம் எம் துயர் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகள் ! அத்துடன் அன்னாரின் இறுதிக் கிரியைகளிற் கலந்து கொண்டவர்களுக்கும் அந்தியேட்டி , வீட்டுக்கிருத்தியக் கிரியைகளில் பங்குகொண்டு பிரார்த்தித்தோர் ” மற்றும் அனைத்து நல்லுள்ளங்களிற்கும் எமது நன்றிகள் ! குடும்பத்தினர்