1987 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள், 17 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகியன காரணமாக இல்லாமல் போயுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
17 மற்றும் 18 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களில் காவற்துறை அதிகாரங்கள் குறித்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காவற்துறை அதிகாரங்களின் பலம் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது காணப்படும் நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.