சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால், இலங்கையில் நடாத்தப்பட்ட கணிதப்போட்டி 2022ஆம் ஆண்டுக்கான போட்டியில் பரிசில்கள் பெற தகுதியுடைய மாணவர்களுக்கு 15.10.2022 அன்று வல்வை மண்ணில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட கணிதப் பெருவிழாவில்,சிதம்பரா கல்லூரி மற்றும் வல்வை முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் சிறந்த பேறுபெறுகளை பெற்ற மாணவ, மாணவியர்கள் கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு றோயல் கல்லூரியில் முதல் வல்வை றோமன் கத்தோலிக்க பாடசாலை வரை இலங்கையின் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவ,மாணவியர்கள் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து தமது பிள்ளைகளுடன் வல்வை மண்ணில் வந்திறங்கியவர்களுக்கான தங்குமிட வசதிகள், சாப்பாடு,போக்குவரத்து என அனைத்தையும் மிக நேர்த்தியாக சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
































































