அமெரிக்கர்களின் தூக்கத்தை குலைக்கும் அல்கைதாவின் மிரட்டல்கள்-

அமெரிக்காவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக உள்ளதால், அதனைத் தாக்குவது எளிதான காரியமே என அல்கொய்தாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காசிம் சவால் விடுத்துள்ளார்.

ஏமனில் இயங்கி வரும் அரேபிய தீப கற்பத்தின், அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவரான காசிம் அல்-ரிமி அமெரிக்காவின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாக விமர்சித்ததோடு, அதனால் அமெரிக்காவைத் தாக்குவது எளிது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நேற்று (02.06.13) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒலிநாடாவில்

சமீபத்தில் பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதங்கள் ஆகியவற்றை வைத்தே அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு குளறுபடிகளை தெரிந்துக்கொள்ளலாம். அமெரிக்காவின் பாதுகாப்பு அவர்களின் கையில் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளலாம். அமெரிக்கா மீது தொடங்கப்பட்ட இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திவிட முடியாது. பாஸ்டனில் வைக்கப்பட்டது போன்ற வெடிகுண்டுகளை தயாரிக்க அனைவராலும் முடியும். இவ்வகை தாக்குதலை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அமெரிக்கர்களின் தூக்கத்தை கெடுப்போம் ‘ என காசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *