சிங்கள பௌத்த சக்திகள் தலைமையிலான 37 சிங்கள தேசிய அமைப்புகள் மாகாண சபைகளுக்கு எதிராக இணைந்துள்ளன:-

சிங்கள பௌத்த சக்திகள் தலைமையிலான 37 சிங்கள தேசிய அமைப்புகள் மாகாண சபைகளுக்கு எதிராக இணைந்துள்ளன:-

சிங்கள பௌத்த சக்திகள் தலைமையிலான 37 சிங்கள தேசிய அமைப்புகள் இணைந்து மாகாண சபைகளுக்கு எதிரான தேசிய ஒன்றியம் என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜாதிக ஹெல உறுமயவின் தலையீட்டில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகளை இல்லாமல் செய்யும் போராட்டத்தை வலுப்படுத்தி, சமூகத்தில் அரசியல் அலை ஒன்றை ஏற்படுத்தி நாடாளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்த புதிய அமைப்பின் நோக்கம் என அமைப்பின் ஏற்பாட்டாளரான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரதான நகரங்களில் மாகாண சபைகளுக்கு எதிரான கூட்டங்களை நடத்தவும் அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.