இந்தோனேஷியா உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு ஆகும். இங்கு மிகக்குறைந்த அளவிலே இந்துக்கள் உள்ளனர்.
இந்த நாட்டில் இந்துக்களின் கல்விக்கடவுள் என வணங்கப்படுகிற சரஸ்வதியின் 16 அடி சிலை ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்த சிலையின் பீடத்தில் கல்வி தெய்வம் சரஸ்வதி என்று சுட்டிக்காட்டுகிற வகையில் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களையொட்டி தாமரைப்பூவும், அதன் மேல் ஒரு பறவையும், அந்தப் பறவையின் மீது சரஸ்வதி வீணையுடன் நின்று கொண்டு இருப்பது போன்றும் இந்த சிலை அமைந்துள்ளது.
இந்த சிலையை இந்தோனேஷியா, அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்தச்சிலை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு சற்று தொலைவில் நிறுவப்பட்டு, கம்பீரமாக காட்சி தருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளை மாளிகையிலிருந்து சில மைல்கள் தொலைவில் இந்திய தூதரகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதரகதத்தில் சரஸ்வதி சிலை நிறுவப்பட்டாலும், முறைப்படி இன்னும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. ஆனாலும், அதற்குள் அமெரிக்க வாழ் இந்து மக்கள், சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் சரஸ்வதி சிலையை நேரில் கண்டு வழிபட்டு செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.