13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க முடியும் – ஜனாதிபதி

13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாடுகளை களையும் நோக்கில் ஜனாதிபதி, ஜாதிக ஹெல உறுமய, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிப் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட உத்தேச மாற்றங்கள் தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது தங்களுக்கு விரும்பியவாறு வாக்களிக்க முடியும் என ஜனாதிபதி, ஜாதிக உறுமயவின் சிரேஸ்ட உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவிடம் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *