இந்தோனேஷியாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தோனேஷியாவில் அடிக்கடி விமான விபத்துக்கள் நடக்கின்றன.
இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தோனேஷியாவின் மெர்பாட்டி நுசந்தாரா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ப்ளோர்ஸ் தீவிலிருந்து புறப்பட்டு குபாங் நகரில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் 6 விமான ஊழியர்கள் உட்பட 52 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் விமானம் தரையிறங்கிய போது, உடல்பாகம் திடீரென தரை தட்டியதால் பயணிகளிடையே பதற்றம் அதிகரித்தது.
இதனால் விமான இறக்கைகள் தேசம் அடைந்ததுடன், விமானத்தின் கண்ணாடிகள் உடைந்தன.
இந்த விபத்தில் இரு பயணிகள் காயமடைந்தனர்.