இலங்கையில் இயங்கும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும் கோத்தாபயவிடம் அனுமதி பெறவேண்டும்:-

இலங்கையில் இயங்கும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும் கோத்தாபயவிடம் அனுமதி பெறவேண்டும்:-

நாட்டுக்கு சேவையாற்றும் போர்வையில் நாட்டை கவிழ்க்க முயற்சியாம்.

இலங்கையில் இயங்கும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களை பதிவுசெய்யும் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு சேவையாற்றும் போர்வையில், நாட்டை கவிழ்க்கவும், அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபடவும், கொள்ளையடிக்கவும் அரசியலில் ஈடுபடவும் முனைப்புகளை மேற்கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தம்மை பதிவுசெய்து கொள்ளாது ரகசியமான முறையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்காது இருப்பதற்காகவே இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் பதிவுசெய்யாது இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். அத்துடன் அந்த நிறுவனங்கள் இலங்கையில் இயங்குவது தடைசெய்யப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்களை பதிவுசெய்யும்  செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் காண்காணிப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தற்போது சுமார் 100 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன

Leave a Reply

Your email address will not be published.