இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 87–வது பிறந்த நாள் விழா லண்டனில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.
இந்நிகழ்வில் பங்கேற்கும் இதில் 1,180 பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் கிராமி விருது பெற்ற பிரபல பாடகி அடெலி (வயது 25), ‘மிஸ்டர் பீன்’ கதாபாத்திர நடிகர் ரோவன் அத்கின்சன் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் தவிர சிற்பகலைஞர் அனிஷ் கபூர், நடிகைகள் ஜூலியன் குளோவெர், கிளாரி புலூம் உள்பட திரைப்பட உலக பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.