இரண்டாம் இடத்தை பெற்றது வல்வை ஒற்றுமை அணி….
வல்வை விளையாட்டுக்கழகத்தின் அனுமதியுடன் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்தும் அணிக்கு 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை 19/05/2023 வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றுள்ளது!
அந்தவகையில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் இளங்கதிர் A அணியினை எதிர்த்து வல்வை ஒற்றுமை அணியானது மோதியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ் ஆட்டத்தில் பிரசாந் -03 கோலினையும்
ஜெகதாஸ் ( குட்டிமணி) 01 கோலினையும் பெற்றுக்கொடுக்க இளங்கதிர் A அணியானது 4:0என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதலாம் இடத்தை பெற்றது!
இரண்டாம் இடத்தினை வல்வை ஒற்றுமை அணியினர் தக்க வைத்தனர்





