Search

இணையற்ற தலைவன் மாவீரன் பிரபாகரனை ஏன் காட்டவில்லை? சத்தியராஜ்!

பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..!!” என்கிற தனது ஆதங்கத்தினை நடிகர் சத்யராஜ் வெளிபட்டுத்தினார்.

தலைவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். முன்னதாகத் தலைவர்களைப் பற்றிய லேசர் வரைகலையில் பிரபாகரன் காட்டப் படாததில் ஏற்கனவே பலர் அதிருப்தியில் இருக்க, புரட்சித் தமிழன் மற்றும் ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய சத்யராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன..? மேடையில் ஏறிய அவர், ” உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்…

நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..!!” என்கிற தனது ஆதங்கத்தினை வெளிபட்டுத்தினார்.




Leave a Reply

Your email address will not be published.