
இதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு அதிகாரிகளும் வெலிங்டன் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார திசாநாயக்க மற்றும் மேஜர் சீ.ஹரிஸ்சந்திர ஹெட்டியாரச்சி ஆகியோர் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்தனர். குறித்த படையதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதனை தமிழக அரசாங்கமும் ஏனைய கட்சிகளும் எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழக முகாம்களில் இலங்கையர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆன்டனி உறுதியளித்த போதிலும், கடந்த மே மாதம் இரண்டு படையதிகாரிகள் பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் நேற்றைய தினம் வெலிங்கடன் முகாமை முற்றுகையிட்டதனைத் தொடர்ந்த குறித்த படையதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குடும்பங்களுடன் தங்கியிருந்த குறித்த இலங்கைப் படையதிகாரிகள் மும்பைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.